×
يونسவசனம் 103

அல்-முக்தஸர்

ثُمَّ نُنَجِّى رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ ۚ كَذَٰلِكَ حَقًّا عَلَيْنَا نُنجِ ٱلْمُؤْمِنِينَ ﴿١٠٣﴾

பின்னர் அவர்கள் மீது வேதனையை இறக்கி நம்முடைய தூதர்களையும் அவர்களுடன் நம்பிக்கை கொண்டவர்களையும் காப்பாற்றுகின்றோம். அவர்களின் சமூகத்திற்கு ஏற்பட்டது அவர்களுக்கு ஏற்படுவதில்லை. நாம் அந்த தூதர்களையும் அவர்களுடன் நம்பிக்கை கொண்டவர்களையும் காப்பாற்றியது போன்றே அல்லாஹ்வின் தூதரையும் அவருடன் உள்ள நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றுவது நம்மீது நாம் விதித்துக் கொண்ட கடமையாகும்.