அல்-முக்தஸர்
وَمَا كَانَ ٱلنَّاسُ إِلَّآ أُمَّةً وَٰحِدَةً فَٱخْتَلَفُوا۟ ۚ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِن رَّبِّكَ لَقُضِىَ بَيْنَهُمْ فِيمَا فِيهِ يَخْتَلِفُونَ ﴿١٩﴾
மனிதர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட ஒரே சமூகமாக இருந்தார்கள். பின்னர் கருத்து வேறுபாடு கொண்டார்கள். அவர்களில் சிலர் நம்பிக்கையில் நிலைத்திருந்தார்கள். சிலர் நிராகரித்துவிட்டார்கள். அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவற்றில் இவ்வுலகில் அவர்களிடையே தீர்ப்பளிக்க மாட்டான், மறுமை நாளில்தான் தீர்ப்பளிப்பான் என்ற அல்லாஹ்வின் விதி முந்தியிராவிட்டால் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவற்றில் இவ்வுலகிலேயே தீர்ப்பளித்திருப்பான், நேர்வழி பெற்றவர் யார் வழிகெட்டவர் யார் என்பது தெளிவாகியிருக்கும்.