அல்-முக்தஸர்
وَإِذَآ أَذَقْنَا ٱلنَّاسَ رَحْمَةً مِّنۢ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُمْ إِذَا لَهُم مَّكْرٌ فِىٓ ءَايَاتِنَا ۚ قُلِ ٱللَّهُ أَسْرَعُ مَكْرًا ۚ إِنَّ رُسُلَنَا يَكْتُبُونَ مَا تَمْكُرُونَ ﴿٢١﴾
இணைவைப்பாளர்களுக்கு ஏற்பட்ட பஞ்சத்திற்கும் ஏழ்மைக்கும் பிறகு மழை, செழிப்பு ஆகிய அருள்களை அவர்கள் அனுபவிக்குமாறு செய்தால் அவர்களோ நம்முடைய சான்றுகளை நிராகரித்து சூழ்ச்சி செய்கிறார்கள். -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “சூழ்ச்சியிலும், உங்களை விட்டுப் பிடிப்பதிலும், தண்டிப்பதிலும் அல்லாஹ் மிக விரைவானவன். நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளை உங்களைக் கண்காணிக்கும் வானவர்கள் எழுதுகிறார்கள். எதுவும் அவர்களை விட்டுத் தப்பிவிட முடியாது எனும் போது எவ்வாறு அவர்களின் படைப்பாளனை விட்டுத் தப்பிவிட முடியும்? உங்களின் சூழ்ச்சிகளுக்கு அல்லாஹ் தண்டனை வழங்குவான்.