அல்-முக்தஸர்
فَلَمَّآ أَنجَىٰهُمْ إِذَا هُمْ يَبْغُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ ۗ يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّمَا بَغْيُكُمْ عَلَىٰٓ أَنفُسِكُم ۖ مَّتَـٰعَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ ثُمَّ إِلَيْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ﴿٢٣﴾
அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனையைச் செவியேற்று அவர்களை அச்சோதனையிலிருந்து காப்பாற்றினால் அவர்களோ அல்லாஹ்வை நிராகரித்து, பாவங்கள் செய்து உலகில் குழப்பம் விளைவிக்கிறார்கள். -மனிதர்களே!- விழித்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் தீய செயல்களின் மோசமான விளைவை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும். அதனால் அல்லாஹ்வுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. அதன் மூலம் அழியக்கூடிய இவ்வுலக வாழ்க்கையில் நீங்கள் சுகத்தை அனுபவிக்கிறீர்கள். பின்னர் மறுமை நாளில் நம் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். நீங்கள் செய்துகொண்டிருந்த பாவங்கள் குறித்து நாம் உங்களுக்கு அறிவிப்போம். அவற்றிற்கேற்ப நாம் உங்களுக்குத் தண்டனையளிப்போம்.