×
يونسவசனம் 25

அல்-முக்தஸர்

وَٱللَّهُ يَدْعُوٓا۟ إِلَىٰ دَارِ ٱلسَّلَـٰمِ وَيَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ ﴿٢٥﴾

அல்லாஹ் மனிதர்கள் அனைவரையும் அமைதியின் இல்லமான சுவனத்தின் பக்கம் அழைக்கிறான். அங்கு மக்கள் கவலைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் மரணத்திலிருந்தும் பாதுகாக்கப்படுவார்கள். அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு இந்த அமைதியின் இல்லத்திற்குக் கொண்டு செல்லும் இஸ்லாம் என்னும் மார்க்கத்தின்பால் வழிகாட்டுகிறான்.