×
يونسவசனம் 31

அல்-முக்தஸர்

قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ أَمَّن يَمْلِكُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَـٰرَ وَمَن يُخْرِجُ ٱلْحَىَّ مِنَ ٱلْمَيِّتِ وَيُخْرِجُ ٱلْمَيِّتَ مِنَ ٱلْحَىِّ وَمَن يُدَبِّرُ ٱلْأَمْرَ ۚ فَسَيَقُولُونَ ٱللَّهُ ۚ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ ﴿٣١﴾

தூதரே! அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கும் இவர்களிடம் நீர் கேட்பீராக: “வானத்திலிருந்து உங்கள் மீது மழையை இறக்கி உங்களுக்கு உணவளிப்பவன் யார்? பூமியிலிருந்து தாவரங்களையும் இன்னபிற கனிமங்களையும் வெளிப்படுத்தி உங்களுக்கு உணவளிப்பவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை விந்திலிருந்து மனிதனை, முட்டையிலிருந்து பறவையை வெளிப்படுத்துபவன் யார்? உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை உதாரணமாக மிருகத்திலிருந்து விந்தை பறவயிலிருந்து முட்டையை வெளிப்படுத்துபவன் யார்? வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிலுமுள்ள எல்லா படைப்புகளையும் பராமரித்து நிர்வகிப்பவன் யார்? இவையனைத்தையும் செய்பவன் அல்லாஹ்தான் என்று அவர்கள் பதில் கூறுவார்கள். தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் இவற்றை அறிய மாட்டீர்களா? அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்ச மாட்டீர்களா?”