×
يونسவசனம் 36

அல்-முக்தஸர்

وَمَا يَتَّبِعُ أَكْثَرُهُمْ إِلَّا ظَنًّا ۚ إِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًٔا ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِمَا يَفْعَلُونَ ﴿٣٦﴾

இணைவைப்பாளர்களில் பெரும்பாலோர் தங்களுக்கு எது குறித்து அறிவில்லையோ அதனையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் யூகங்களையும் சந்தேகங்களையுமே பின்பற்றுகிறார்கள். ஐயம் அறிவுக்கு சமனாகாது, அறிவுக்கு முன்னால் யூகம் எப்பயனையும் அளிக்காது. அவர்கள் செய்யக் கூடியதை அல்லாஹ் நன்கறிந்தவன். அவர்கள் செய்யும் எதுவும் அல்லாஹ்வை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.