×
يونسவசனம் 38

அல்-முக்தஸர்

أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ ۖ قُلْ فَأْتُوا۟ بِسُورَةٍ مِّثْلِهِۦ وَٱدْعُوا۟ مَنِ ٱسْتَطَعْتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمْ صَـٰدِقِينَ ﴿٣٨﴾

நிச்சயமாக “முஹம்மது இந்த குர்ஆனை சுயமாகப் புனைந்து கொண்டு அல்லாஹ்வின் வார்த்தை என்று பொய் கூறுகிறார்” என்று இந்த இணைவைப்பாளர்கள் கூறுகிறார்களா? -தூதரே!- நீர் அவர்களுக்கு மறுப்பாக கூறுவீராக: “நான் இதனை சுயமாகப் புனைந்து கொண்டுவந்திருந்தால் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; எனவே இதுபோன்ற ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். குர்ஆன் புனைந்து கூறப்பட்டது என்று நீங்கள் கூறும் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களால் அழைக்க முடிந்தவர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டு அதனைச் செய்யுங்கள். உங்களால் ஒருபோதும் இவ்வாறு செய்ய முடியாது. நீங்கள் மொழிச் சொந்தக்காரர்களாகவும் இலக்கிய ஜாம்பவான்களாகவும் இருந்தும் உங்களால் அவ்வாறு கொண்டுவர முடியாமை குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டது என்பதற்கான சான்றாகும்.