×
يونسவசனம் 46

அல்-முக்தஸர்

وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ ٱلَّذِى نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ ٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا يَفْعَلُونَ ﴿٤٦﴾

தூதரே!- நீர் மரணிப்பதற்கு முன்பே நாம் அவர்களுக்கு வாக்களித்த வேதனையில் சிலவற்றை உமக்குக் காட்டுவோம். அல்லது அதற்கு முன்பே உம்மை மரணிக்கச் செய்வோம். இந்த இரண்டு நிலைமைகளும் எவ்வாறு இருந்தாலும் மறுமை நாளில் அவர்கள் நம் பக்கமே திரும்ப வேண்டும். பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களை அல்லாஹ் கவனித்தவனாகவே உள்ளான். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.