அல்-முக்தஸர்
وَلَوْ أَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِى ٱلْأَرْضِ لَٱفْتَدَتْ بِهِۦ ۗ وَأَسَرُّوا۟ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُا۟ ٱلْعَذَابَ ۖ وَقُضِىَ بَيْنَهُم بِٱلْقِسْطِ ۚ وَهُمْ لَا يُظْلَمُونَ ﴿٥٤﴾
அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஒவ்வொருவருக்கும் பூமி நிறைய பெறுமதியான செல்வங்கள் இருந்தாலும், ஈட்டுத் தொகை கொடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தப்பிப்பதற்காக அனைத்தையும் ஈடாக அளித்துவிடுவார். மறுமை நாளில் தங்களின் நிராகரிப்பினால் இணைவைப்பாளர்கள் வேதனையைக் காணும் போது கைசேதத்தை மறைத்துக் கொள்வார்கள். அவர்களிடையே அல்லாஹ் நியாயமாகத் தீர்ப்பளிப்பான். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். தங்களின் செயல்களுக்குத்தான் அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்.