அல்-முக்தஸர்
وَمَا تَكُونُ فِى شَأْنٍ وَمَا تَتْلُوا۟ مِنْهُ مِن قُرْءَانٍ وَلَا تَعْمَلُونَ مِنْ عَمَلٍ إِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُودًا إِذْ تُفِيضُونَ فِيهِ ۚ وَمَا يَعْزُبُ عَن رَّبِّكَ مِن مِّثْقَالِ ذَرَّةٍ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ وَلَآ أَصْغَرَ مِن ذَٰلِكَ وَلَآ أَكْبَرَ إِلَّا فِى كِتَـٰبٍ مُّبِينٍ ﴿٦١﴾
தூதரே!- நீர் ஏதேனும் ஒரு காரியத்தில் இருந்தாலும், குர்ஆனிலிருந்து எதைப் படித்தாலும் -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் எந்த செயலைச் செய்தாலும் நீங்கள் அதனைச் செய்வதற்கு முன்வந்து அதனை ஆரம்பிக்கும் போதே நாம் உங்களைப் பார்த்துக் கொண்டும், அறிந்து கொண்டும், செவியேற்றுக் கொண்டும் இருக்கிறோம். வானத்திலோ பூமியிலோ அணுவளவும், அதைவிட சிறியதும் பெரியதும் உம் இறைவனின் அறிவை விட்டும் மறையாது. அவைகள் எதுவும் தெளிவான பதிவேட்டில் பதியப்படாமல் இல்லை. சிறியது, பெரியது என எதையும் பாதுகாக்காது அவன் விட்டு விடமாட்டான்.