×
يونسவசனம் 68

அல்-முக்தஸர்

قَالُوا۟ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدًا ۗ سُبْحَـٰنَهُۥ ۖ هُوَ ٱلْغَنِىُّ ۖ لَهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۚ إِنْ عِندَكُم مِّن سُلْطَـٰنٍۭ بِهَـٰذَآ ۚ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ ﴿٦٨﴾

இணைவைப்பாளர்களில் ஒரு பிரிவினர், “அல்லாஹ் வானவர்களை மகள்களாக எடுத்துக் கொண்டான்” என்று கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். அவன் படைப்புகள் அனைத்தையும் விட்டு தேவையற்றவன். வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அவனுக்கே உரியன. -இணைவைப்பாளர்களே!- உங்களது இக்கூற்றுக்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அல்லாஹ்வுக்கு பிள்ளை உண்டு என்ற மிகப் பெரும் கருத்தை அதன் யதார்த்தத்தைப் புரியாமல் ஆதாரமின்றி அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?