அல்-முக்தஸர்
قَالُوٓا۟ أَجِئْتَنَا لِتَلْفِتَنَا عَمَّا وَجَدْنَا عَلَيْهِ ءَابَآءَنَا وَتَكُونَ لَكُمَا ٱلْكِبْرِيَآءُ فِى ٱلْأَرْضِ وَمَا نَحْنُ لَكُمَا بِمُؤْمِنِينَ ﴿٧٨﴾
பிர்அவ்னின் சமூகத்தார் மூஸாவிடம் விடையளித்தவாறு கூறினார்கள்: “எங்கள் முன்னோர்களின் மார்க்கத்தை விட்டு எம்மைத் திசை திருப்பவும் உமக்கும் உமது சகோதரருக்கும் அதிகாரம் கிடைக்கவுமா இந்த சூனியத்தை எம்மிடம் எடுத்து வந்துள்ளீர்கள்? -மூஸாவே ஹாரூனே- நீங்கள் இருவரும் எங்களிடம் அனுப்பப்பட்ட இறை தூதர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்பவர்களாக இல்லை.