அல்-முக்தஸர்
فَمَآ ءَامَنَ لِمُوسَىٰٓ إِلَّا ذُرِّيَّةٌ مِّن قَوْمِهِۦ عَلَىٰ خَوْفٍ مِّن فِرْعَوْنَ وَمَلَإِي۟هِمْ أَن يَفْتِنَهُمْ ۚ وَإِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِى ٱلْأَرْضِ وَإِنَّهُۥ لَمِنَ ٱلْمُسْرِفِينَ ﴿٨٣﴾
அச்சமுதாயம் புறக்கணிப்பதாக தீர்மானித்திருந்தனர். அதனால் மூஸா -தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும்- கொண்டு வந்தும் அவர்கள் அவரை நம்பவில்லை. ஆயினும் இஸ்ராயீலின் மக்களில் சில இளைஞர்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டார்கள். அவர்களும் தங்களின் விஷயம் வெளிப்பட்டுவிட்டால் பிர்அவ்னும் அவனுடைய சமூகத்தினரும் தங்களை வேதனைக்குட்படுத்தி ஈமானை விட்டும் திசைதிருப்பி விடுவார்களோ என்ற பயத்தில்தான் இருந்தார்கள். நிச்சயமாக பிர்அவ்ன் எகிப்திய மக்களின் மீது அடக்குமுறையாளன். மேலும் அவன் நிராகரிப்பிலும், இஸ்ராயீலின் மக்களைக் கொல்வதிலும் வேதனைக்குட்படுத்துவதிலும் வரம்புமீறுபவன்.