×
يونسவசனம் 87

அல்-முக்தஸர்

وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰ وَأَخِيهِ أَن تَبَوَّءَا لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوتًا وَٱجْعَلُوا۟ بُيُوتَكُمْ قِبْلَةً وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ ۗ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ ﴿٨٧﴾

நாம் மூஸாவுக்கும் அவருடைய சகோதரர் ஹாரூனுக்கும் வஹி அறிவித்தோம்: “அல்லாஹ் ஒருவனையே வணங்குவதற்கு உங்கள் சமூகத்துக்கு சில வீடுகளை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களது வீடுகளை கிப்லாவான (பைதுல் முகத்தஸின்) பக்கம் முன்னோக்கியதாக அமைத்துக் கொள்ளுங்கள். தொழுகையை பரிபூரணமாக நிறைவேற்றுங்கள். -மூஸாவே!- நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்தும் அல்லாஹ்வின் உதவி, எதிரிகளின் அழிவு, பூமியில் அவர்களை வழித்தோன்றல்களாக ஆக்குதல் ஆகிய விஷயங்களைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக.