×
هودவசனம் 10

அல்-முக்தஸர்

وَلَئِنْ أَذَقْنَـٰهُ نَعْمَآءَ بَعْدَ ضَرَّآءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ ٱلسَّيِّـَٔاتُ عَنِّىٓ ۚ إِنَّهُۥ لَفَرِحٌ فَخُورٌ ﴿١٠﴾

அவனுக்கு ஏற்பட்ட வறுமைக்கும் நோய்க்கும் பிறகு அவனது வாழ்வாதாரத்தில் விசாலத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கினால், “தீங்கு என்னை விட்டு அகன்று விட்டது, துன்பம் என்னை விட்டு நீங்கி விட்டது” என்று கூறுகிறான். அதற்காக அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதில்லை. பெருமிதம் கொள்பவனாகவும் அல்லாஹ் தனக்கு அளித்த அருட்கொடைகளைக் கொண்டு மக்களை அதிகம் அவமதிப்பவனாகவும் பெருமை பேசித் திரிபவனாகவும் இருக்கின்றான்.