×
هودவசனம் 101

அல்-முக்தஸர்

وَمَا ظَلَمْنَـٰهُمْ وَلَـٰكِن ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ ۖ فَمَآ أَغْنَتْ عَنْهُمْ ءَالِهَتُهُمُ ٱلَّتِى يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ مِن شَىْءٍ لَّمَّا جَآءَ أَمْرُ رَبِّكَ ۖ وَمَا زَادُوهُمْ غَيْرَ تَتْبِيبٍ ﴿١٠١﴾

நாம் அவர்களுக்கு அளித்த தண்டனையின் மூலம் அவர்கள் மீது நாம் அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து அழிவிற்கான காரணிகளைத் தேடி தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டார்கள். -தூதரே- அவர்களை அழிக்குமாறு அல்லாஹ்வின் கட்டளை வந்த போது அவர்கள் மீது இறங்கிய தண்டனையை அவனை விடுத்து அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்கள் எதுவும் அவர்களை விட்டும் தடுக்கவில்லை. இந்த தெய்வங்கள் அவர்களுக்கு நஷ்டத்தையும் அழிவையுமே அதிகப்படுத்தின.