×
هودவசனம் 110

அல்-முக்தஸர்

وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ فَٱخْتُلِفَ فِيهِ ۚ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِن رَّبِّكَ لَقُضِىَ بَيْنَهُمْ ۚ وَإِنَّهُمْ لَفِى شَكٍّ مِّنْهُ مُرِيبٍ ﴿١١٠﴾

நாம் மூஸாவிற்கு தவ்ராத்தை வழங்கினோம். மக்கள் அதில் முரண்பட்டார்கள். அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டார்கள்; சிலர் நிராகரித்தார்கள். உடனுக்குடன் அல்லாஹ் தண்டிக்க மாட்டான்; மாறாக மறுமை நாள் வரை ஒரு நோக்கத்தோடு வேதனையைத் தாமதப்படுத்துவான் என்ற அவனுடைய விதி முந்தியிராவிட்டால் இவ்வுலகில் அவர்களுக்குத் தக்க தண்டனையை அவன் வழங்கியிருப்பான். நிச்சயமாக நிராகரிப்பாளர்களான யூதர்களும் இணைவைப்பாளர்களும் குர்ஆனைக் குறித்து கடும் சந்தேகத்திலே உள்ளனர்.