அல்-முக்தஸர்
أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ ۖ قُلْ فَأْتُوا۟ بِعَشْرِ سُوَرٍ مِّثْلِهِۦ مُفْتَرَيَـٰتٍ وَٱدْعُوا۟ مَنِ ٱسْتَطَعْتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمْ صَـٰدِقِينَ ﴿١٣﴾
“முஹம்மது குர்ஆனை சுயமாகப் புனைந்து கொண்டார். அது அல்லாஹ்விடமிருந்து அறிவிக்கப்பட்ட வஹி அல்ல” என்று இணைவைப்பாளர்கள் கூறுகிறார்களா? -தூதரே!- நீர் அவர்களிடம் சவால் விடுத்தவராகக் கூறுவீராக: “நீங்கள் புனையப்பட்டதாக வாதிடும் குர்ஆனைப் போன்று உண்மையற்ற இந்த குர்ஆனில் உள்ளதைப் போன்ற பத்து அத்தியாயங்களைப் புனைந்து கொண்டு வாருங்கள் பார்க்கலாம். குர்ஆன் புனைந்து கூறப்பட்டது என்ற உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்காக உங்களால் உதவிக்கு அழைக்க முடிந்தவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்.