×
هودவசனம் 17

அல்-முக்தஸர்

أَفَمَن كَانَ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّهِۦ وَيَتْلُوهُ شَاهِدٌ مِّنْهُ وَمِن قَبْلِهِۦ كِتَـٰبُ مُوسَىٰٓ إِمَامًا وَرَحْمَةً ۚ أُو۟لَـٰٓئِكَ يُؤْمِنُونَ بِهِۦ ۚ وَمَن يَكْفُرْ بِهِۦ مِنَ ٱلْأَحْزَابِ فَٱلنَّارُ مَوْعِدُهُۥ ۚ فَلَا تَكُ فِى مِرْيَةٍ مِّنْهُ ۚ إِنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّكَ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يُؤْمِنُونَ ﴿١٧﴾

தம் இறைவனிடமிருந்து ஆதாரத்தைப் பெற்று, அவனிடமிருந்துள்ள சாட்சியான ஜிப்ரீல் அவரைத் தொடரும் முஹம்மது நபியும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் வழிகேட்டில் தடுமாறித் திரியும் நிராகரிப்பாளர்களும் சமமாக மாட்டார்கள். அவரது தூதுக்கு குர்ஆனுக்கு முன் மூஸாவின் மீது மக்களுக்கு வழிகாட்டியாகவும் அருளாகவும் இறக்கப்பட்ட தவ்ராதும் சான்று பகர்கின்றது. முஹம்மதின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் குர்ஆனையும் அவர் மீது இறக்கப்பட்டதையும் உண்மைப்படுத்துகிறார்கள். அதனை நிராகரிக்கும் பிற சமயத்தினர் மறுமைநாளில் நரகத்தையே தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடமாகப் பெறுவார்கள். -தூதரே!- குர்ஆனைக் குறித்தும் அது கூறும் அவர்களுக்கு வாக்களிக்கப்ட்ட இடம் குறித்தும் சந்தேகம் கொண்டு விடாதீர். அது சந்தேகமற்ற உண்மையாகும். மனிதர்களில் பெரும்பாலோர் தெளிவான ஆதாரங்களும் சான்றுகளும் இருந்தும் நம்பிக்கை கொள்வதில்லை.