அல்-முக்தஸர்
أُو۟لَـٰٓئِكَ لَمْ يَكُونُوا۟ مُعْجِزِينَ فِى ٱلْأَرْضِ وَمَا كَانَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ مِنْ أَوْلِيَآءَ ۘ يُضَـٰعَفُ لَهُمُ ٱلْعَذَابُ ۚ مَا كَانُوا۟ يَسْتَطِيعُونَ ٱلسَّمْعَ وَمَا كَانُوا۟ يُبْصِرُونَ ﴿٢٠﴾
இந்த பண்புகளை உடையவர்கள் அல்லாஹ்வின் வேதனை இறங்கினால் அதிலிருந்து இப்பூமியில் எங்கும் விரண்டோட சக்தியற்றவர்களாவர். அல்லாஹ்வின் வேதனையை அவர்களை விட்டும் தடுக்கும் அல்லாஹ்வைத் தவிரவுள்ள எந்த உதவியாளர்களும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு விட்டதனாலும் பிற மக்களையும் அதனை விட்டுத் தடுத்ததனாலும் மறுமை நாளில் அவர்களின் வேதனை இன்னும் அதிகரிப்படும். அவர்கள் இவ்வுலகில் சத்தியத்தையும் நேர்வழியையும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் செவியேற்பவர்களாக இருக்கவில்லை; சத்தியத்தை அவர்கள் கடுமையாக புறக்கணித்ததனால் பிரபஞ்சத்தில் காணப்படும் அல்லாஹ்வின் சான்றுகளை பயனளிக்கும் விதத்தில் பார்க்கக்கூடியவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை.