அல்-முக்தஸர்
قَالَ إِنَّمَا يَأْتِيكُم بِهِ ٱللَّهُ إِن شَآءَ وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ ﴿٣٣﴾
நூஹ் அவர்களிடம் கூறினார்: “வேதனையை நான் உங்களிடம் கொண்டுவர முடியாது. அல்லாஹ் நாடினால் அவனே உங்களிடம் வேதனையைக் கொண்டு வருவான். அவன் உங்களைத் தண்டிக்க நாடினால் அவனுடைய தண்டனையிலிருந்து தப்புவதற்கு நீங்கள் ஆற்றல் உள்ளவர்களல்ல.”