×
هودவசனம் 46

அல்-முக்தஸர்

قَالَ يَـٰنُوحُ إِنَّهُۥ لَيْسَ مِنْ أَهْلِكَ ۖ إِنَّهُۥ عَمَلٌ غَيْرُ صَـٰلِحٍ ۖ فَلَا تَسْـَٔلْنِ مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ ۖ إِنِّىٓ أَعِظُكَ أَن تَكُونَ مِنَ ٱلْجَـٰهِلِينَ ﴿٤٦﴾

அல்லாஹ் நூஹிடம் கூறினான்: “நூஹே! நீர் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்ட உம் மகன் நான் காப்பாற்றுவதாக வாக்களித்த உம் குடும்பத்தைச் சார்ந்தவன் அல்ல. ஏனெனில் அவன் நிராகரிப்பாளன். உம்முடைய கேள்வி உமக்குப் பொருத்தமற்ற கேள்வியாகும். உம் தரத்தில் இருப்பவர்களுக்கு அது உகந்ததல்ல. உமக்கு அறிவில்லாத விஷயங்களைக் குறித்து என்னிடம் கேட்காதீர். நீர் அறிவீனர்களில் ஒருவராக ஆகி என் அறிவுக்கும் நோக்கத்திற்கும் முரணானவற்றைக் கேட்பதை விட்டும் நான் உம்மை எச்சரிக்கிறேன்.”