×
هودவசனம் 78

அல்-முக்தஸர்

وَجَآءَهُۥ قَوْمُهُۥ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِن قَبْلُ كَانُوا۟ يَعْمَلُونَ ٱلسَّيِّـَٔاتِ ۚ قَالَ يَـٰقَوْمِ هَـٰٓؤُلَآءِ بَنَاتِى هُنَّ أَطْهَرُ لَكُمْ ۖ فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَلَا تُخْزُونِ فِى ضَيْفِىٓ ۖ أَلَيْسَ مِنكُمْ رَجُلٌ رَّشِيدٌ ﴿٧٨﴾

லூத்தின் சமூகத்தார் அவருடைய விருந்தினருடன் மானக்கேடான காரியத்தை செய்ய நாடி அவரிடம் விரைந்து வந்தார்கள். அவர்கள் இதற்கு முன்னர் தங்களின் காம இச்சையைத் தணித்துக் கொள்வதற்காக பெண்களை விட்டு விட்டு ஆண்களிடம் செல்வதே அவர்களது வழமையாக இருந்தது. லூத் அவர்களைத் தடுத்தவராகவும் விருந்தினருக்கு முன் தன் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தியவராகவும் கூறினார்: “என் சமூகமே! இவர்கள் என் பெண் பிள்ளைகள். எனவே இவர்களை மணமுடித்து உங்களின் இச்சையைத் தணித்துக் கொள்ளுங்கள். மானக்கேடான செயல்களைச் செய்வதைக்காட்டிலும் இவர்களே உங்களுக்குத் தூய்மையானவர்கள். எனவே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். என் விருந்தினர்கள் விஷயத்தில் என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள். -சமூகமே!- உங்களில் இந்த செயலை விட்டும் தடுக்கக்கூடிய நேர்மையான ஒருவரேனும் இல்லையா?