அல்-முக்தஸர்
وَلَئِنْ أَخَّرْنَا عَنْهُمُ ٱلْعَذَابَ إِلَىٰٓ أُمَّةٍ مَّعْدُودَةٍ لَّيَقُولُنَّ مَا يَحْبِسُهُۥٓ ۗ أَلَا يَوْمَ يَأْتِيهِمْ لَيْسَ مَصْرُوفًا عَنْهُمْ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ ﴿٨﴾
இவ்வுலக வாழ்வில் இணைவைப்பாளர்களை விட்டும் அவர்களுக்குரிய வேதனையை குறிப்பிட்ட காலம் வரை நாம் பிற்படுத்தினால், அவசரப்பட்டவர்களாகவும் பரிகாசம் செய்தவர்களாகவும் அவர்கள், “நம்மை விட்டும் வேதனையைத் தடுப்பது எது?” அறிந்துகொள்ளுங்கள், எனக் கூறுவார்கள். அவர்களுக்குரிய வேதனை வருவதற்கு அல்லாஹ்விடம் ஒரு நேரம் உண்டு. அது அவர்களிடம் வரும் நாளில் அவர்களை விட்டும் அதனை அகற்றும் எவரையும் அவர்கள் பெறமாட்டார்கள். அது அவர்கள் மீது நிகழ்ந்தே தீரும். அவர்கள் பரிகாசமாக அவசரப்பட்டுக் கொண்டிருந்த வேதனை அவர்களைச் சூழ்ந்துவிட்டது.