×
هودவசனம் 84

அல்-முக்தஸர்

وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا ۚ قَالَ يَـٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُۥ ۖ وَلَا تَنقُصُوا۟ ٱلْمِكْيَالَ وَٱلْمِيزَانَ ۚ إِنِّىٓ أَرَىٰكُم بِخَيْرٍ وَإِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُّحِيطٍ ﴿٨٤﴾

மத்யனை நோக்கி அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “சமூகமே! அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை. மக்களுக்காக நிறுத்தால் அல்லது எடைபோட்டால் நிறுவையையும் அளவையையும் குறைத்து விடாதீர்கள். உங்களுக்கு விசாலமான வாழ்வாதாரமும் அருட்கொடைகளும் வழங்கப்பட்டிருப்பதைக் காண்கிறேன். பாவங்களின் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடைகளை மாற்றிவிடாதீர்கள். நான் உங்கள் ஒவ்வொருவரையும் அடையும், சூழ்ந்துகொள்ளும் நாளின் வேதனையை அஞ்சுகிறேன். அதிலிருந்து நீங்கள் எங்கும் தப்பி ஓட முடியாது. ஒதுங்கும் இடத்தை பெற்றுக்கொள்ளவும் முடியாது”