×
هودவசனம் 86

அல்-முக்தஸர்

بَقِيَّتُ ٱللَّهِ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ ۚ وَمَآ أَنَا۠ عَلَيْكُم بِحَفِيظٍ ﴿٨٦﴾

மோசடி செய்து, பூமியில் குழப்பம் விளைவித்து பெறும் செல்வத்தைவிட மக்களுக்கு நியாயமாக அளிக்க வேண்டியதை அளித்த பிறகு மிஞ்சியிருக்கும் செல்வமே அதிகம் பயனளிக்கக்கூடியது; பெருகக்கூடியது. நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் மீதமுள்ளதைக் கொண்டு திருப்தியடையுங்கள். நான் உங்களின் செயல்களைக் கணக்கிட்டு உங்களைக் கண்காணிப்பவன் அல்ல. மறைவானதையும் இரகசியமானதையும் அறிந்தவனே உங்களின் கண்காணிப்பாளன் ஆவான்.