அல்-முக்தஸர்
قَالَ يَـٰقَوْمِ أَرَءَيْتُمْ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّى وَرَزَقَنِى مِنْهُ رِزْقًا حَسَنًا ۚ وَمَآ أُرِيدُ أَنْ أُخَالِفَكُمْ إِلَىٰ مَآ أَنْهَىٰكُمْ عَنْهُ ۚ إِنْ أُرِيدُ إِلَّا ٱلْإِصْلَـٰحَ مَا ٱسْتَطَعْتُ ۚ وَمَا تَوْفِيقِىٓ إِلَّا بِٱللَّهِ ۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ ﴿٨٨﴾
ஷுஐப் தம்முடைய சமூகத்தாரிடம் கூறினார்: -“சமூகமே!- நான் என் இறைவனிடமிருந்து தெளிவான ஆதாரத்தையும் அகப்பார்வையையும் பெற்றிருந்து அவன் எனக்கு தூதுத்துவம் என்னும் தூய்மையான அருட்கொடையையும் வழங்கியிருந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை எனக்குக் கூறுங்கள். நான் உங்களை ஒரு விஷயத்தை விட்டும் தடுத்து விட்டு அதற்கு மாறாக செயல்பட விரும்பவில்லை. உங்கள் இறைவனான அல்லாஹ் ஒருவனின் பக்கம் உங்களை அழைப்பதன் மூலம் என்னால் இயன்றவரை நான் உங்களை சீர்திருத்தம் செய்வதையே விரும்புகிறேன். அல்லாஹ்வே அதற்கான பாக்கியம் அளிக்க முடியும். என்னுடைய எல்லா விவகாரங்களிலும் அவனையே நான் சார்ந்துள்ளேன். அவன் பக்கமே நான் திரும்ப வேண்டும்.