அல்-முக்தஸர்
قَالَ يَـٰقَوْمِ أَرَهْطِىٓ أَعَزُّ عَلَيْكُم مِّنَ ٱللَّهِ وَٱتَّخَذْتُمُوهُ وَرَآءَكُمْ ظِهْرِيًّا ۖ إِنَّ رَبِّى بِمَا تَعْمَلُونَ مُحِيطٌ ﴿٩٢﴾
ஷுஐப் தனது சமூகத்திடம் கூறினார்: “சமூகமே! உங்கள் இறைவனான அல்லாஹ்வை விட என் குலத்தார்தான் உங்களிடம் கண்ணியமானவர்களா? நீங்கள் அல்லாஹ் அனுப்பிய தூதர் மீது நம்பிக்கை கொள்ளாமல் அவனைப் புறக்கணித்துவிட்டீர்கள். நிச்சயமாக என் இறைவன் நீங்கள் செய்பவற்றை சூழ்ந்துள்ளான். நீங்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. இவ்வுலகில் உங்களை அழிப்பதன் மூலமும் மறுமையில் வேதனைக்குட்படுத்துவதன் மூலம் அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.”