×
يوسفவசனம் 100

அல்-முக்தஸர்

وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى ٱلْعَرْشِ وَخَرُّوا۟ لَهُۥ سُجَّدًا ۖ وَقَالَ يَـٰٓأَبَتِ هَـٰذَا تَأْوِيلُ رُءْيَـٰىَ مِن قَبْلُ قَدْ جَعَلَهَا رَبِّى حَقًّا ۖ وَقَدْ أَحْسَنَ بِىٓ إِذْ أَخْرَجَنِى مِنَ ٱلسِّجْنِ وَجَآءَ بِكُم مِّنَ ٱلْبَدْوِ مِنۢ بَعْدِ أَن نَّزَغَ ٱلشَّيْطَـٰنُ بَيْنِى وَبَيْنَ إِخْوَتِىٓ ۚ إِنَّ رَبِّى لَطِيفٌ لِّمَا يَشَآءُ ۚ إِنَّهُۥ هُوَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ ﴿١٠٠﴾

தன் பெற்றோரை தான் அமரும் சிம்மாசனத்தில் அமர்த்திக் கொண்டார். அவருடைய பெற்றோரும் பதினொரு சகோதரர்களும் அவருக்கு சிரம்பணிந்து வாழ்த்துக் கூறினார்கள். அது வணக்கத்திற்கான ஸுஜூத் அல்ல கௌரவிப்புக்கான ஸுஜூத். கனவில் நிகழ்ந்தது போன்று அல்லாஹ்வின் கட்டளை நிகழும் பொருட்டே இவ்வாறு நடந்தது. இதனால்தான் யூஸுஃப் தன் தந்தையிடம் கூறினார்: “நீங்கள் எனக்கு சிரம்பணிந்து தெரிவிக்கும் இந்த வாழ்த்துதான் நான் இதற்கு முன்னால் கண்டு உங்களிடம் கூறிய கனவின் விளக்கம். அதனை நிகழச் செய்து என் இறைவன் அதனை உண்மையாக்கி விட்டான். என் இறைவன் என்னை சிறையிலிருந்து வெளியேற்றிய போதும் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையே ஷைத்தான் குறுக்கிட்ட பின்னரும் உங்களைக் கிராமத்திலிருந்து இங்கு கொண்டுவந்தன் மூலம் அல்லாஹ் என்மீது உபகாரம் புரிந்துள்ளான். என் இறைவன் தான் நாடுவதை நிகழ்த்துவதில் நுட்பமானவன். அவன் தன் அடியார்களின் நிலைமைகளை நன்கறிந்தவன்; தன் ஏற்பாட்டில் ஞானம் மிக்கவன்.