அல்-முக்தஸர்
أَفَأَمِنُوٓا۟ أَن تَأْتِيَهُمْ غَـٰشِيَةٌ مِّنْ عَذَابِ ٱللَّهِ أَوْ تَأْتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ ﴿١٠٧﴾
இந்த இணைவைப்பாளர்கள் தம்மால் தடுக்க முடியாத தம்மை வியாபிக்கும் அல்லாஹ்வின் தண்டனை இவ்வுலகில் தங்களைத் தாக்கிவிடக் கூடும் என்பது குறித்து அச்சமற்று இருக்கிறார்களா? அல்லது மறுமை வருவதை உணர்ந்து அதற்குத் தயாராகுவதற்குக் கூட வாய்ப்புக் கிடைக்காமல், மறுமை நாள் அவர்களிடம் திடீரென வந்து விடுவதை அச்சமற்று இருக்கிறார்களா?. அதனால் தானா அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை?!