×
يوسفவசனம் 11

அல்-முக்தஸர்

قَالُوا۟ يَـٰٓأَبَانَا مَا لَكَ لَا تَأْمَ۫نَّا عَلَىٰ يُوسُفَ وَإِنَّا لَهُۥ لَنَـٰصِحُونَ ﴿١١﴾

அவரை அகற்றும் விஷயத்தில் அவர்கள் உடன்பட்ட போது தங்களின் தந்தை யஃகூபிடம் வந்து கூறினார்கள்: “எங்களின் தந்தையே! உங்களுக்கு என்னவாயிற்று? ஏன் யூஸுஃபின் விஷயத்தில் எங்கள் மீது நம்பிக்கை வைப்பதில்லை? நாங்கள் அவர்மீது அன்பு செலுத்தக் கூடியவர்கள்; அவரை தீங்கிலிருந்து பாதுகாக்கக் கூடியவர்கள்; நிச்சயமாக அவர் உங்களிடம் பாதுகாப்பாக திரும்பி வரும் வரை நாம் அவரைக் காத்து கவனித்து அவருக்கு விசுவாசமாக இருப்போம். எனவே எங்களுடன் அவரை அனுப்புவதற்கு உங்களுக்கு என்ன தடை உள்ளது?