×
يوسفவசனம் 110

அல்-முக்தஸர்

حَتَّىٰٓ إِذَا ٱسْتَيْـَٔسَ ٱلرُّسُلُ وَظَنُّوٓا۟ أَنَّهُمْ قَدْ كُذِبُوا۟ جَآءَهُمْ نَصْرُنَا فَنُجِّىَ مَن نَّشَآءُ ۖ وَلَا يُرَدُّ بَأْسُنَا عَنِ ٱلْقَوْمِ ٱلْمُجْرِمِينَ ﴿١١٠﴾

நாம் அனுப்பிய தூதர்களின் எதிரிகளுக்கு நாம் அவகாசம் அளிக்கின்றோம். அவர்களை விட்டுப்பிடிப்பதற்காக தண்டனையை அவர்களுக்கு நாம் துரிதப்படுத்துவதில்லை. அவர்களை அழிப்பது தாமதமாகி விட்டால் அவர்களின் அழிவில் தூதர்கள் நம்பிக்கையிழந்து மறுத்தவர்களுக்கு தண்டனையும் முஃமின்களுக்கு பாதுகாப்பும் உண்டு என தூதர்கள் பொய்தான் கூறியுள்ளார்கள் என்று நிராகரிப்பாளர்கள் எண்ணும் போது நம் உதவி நம் தூதர்களை வந்தடைகிறது. நிராகரிப்பாளர்களைத் தாக்கும் வேதனையிலிருந்து நாம் தூதர்களையும் நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றி விடுகின்றோம். நாம் வேதனையை இறக்கும் போது குற்றம் செய்த சமூகத்தை விட்டும் அதனை தடுக்க முடியாது.