×
يوسفவசனம் 23

அல்-முக்தஸர்

وَرَٰوَدَتْهُ ٱلَّتِى هُوَ فِى بَيْتِهَا عَن نَّفْسِهِۦ وَغَلَّقَتِ ٱلْأَبْوَٰبَ وَقَالَتْ هَيْتَ لَكَ ۚ قَالَ مَعَاذَ ٱللَّهِ ۖ إِنَّهُۥ رَبِّىٓ أَحْسَنَ مَثْوَاىَ ۖ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلظَّـٰلِمُونَ ﴿٢٣﴾

அரசனின் மனைவி இதமாகவும் தந்திரமாகவும் யூஸுஃபை தவறான நடத்தைக்காக அழைத்தாள். தனிமையை உறுதிப்படுத்த கதவுகள் அனைத்தையும் தாழிட்டுக்கொண்டு, “என் பக்கம் நெருங்கி வா” என்றாள். யூஸுஃப் கூறினார்: “நீ அழைக்கும் விஷயத்திலிருந்து நான் அல்லாஹ்வின் மூலம் பாதுகாவல் தேடுகிறேன். என் எஜமான் என்னை நல்ல முறையில் அவரிடம் தங்க வைத்துள்ளார். நான் அவருக்கு ஒருபோதும் துரோகமிழைக்க மாட்டேன். நான் அவருக்கு துரோகமிழைத்தால் அநியாயக்காரனாக ஆகிவிடுவேன். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”