அல்-முக்தஸர்
وَإِن كَانَ قَمِيصُهُۥ قُدَّ مِن دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ ٱلصَّـٰدِقِينَ ﴿٢٧﴾
அவருடைய சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருந்தால் அது அவர் உண்மை கூறுகிறார் என்பதற்கு ஆதாரமாகும். அவள் பொய் கூறுபவளாவாள். ஏனெனில் அவர் அவளை விட்டும் தப்பி ஓடும் போது அவள் அவரை நாடியிருக்கலாம்.