×
يوسفவசனம் 3

அல்-முக்தஸர்

نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ ٱلْقَصَصِ بِمَآ أَوْحَيْنَآ إِلَيْكَ هَـٰذَا ٱلْقُرْءَانَ وَإِن كُنتَ مِن قَبْلِهِۦ لَمِنَ ٱلْغَـٰفِلِينَ ﴿٣﴾

தூதரே!- நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்குவதன் மூலம் மிகச் சிறந்த சம்பவத்தை நாம் உமக்கு எடுத்துரைக்கின்றோம். ஏனெனில் அவை உண்மையானவை, அதனது வார்த்தைகளும் சொல்லணியும் தவறுகளற்றவை. நிச்சயமாக இதனை இறக்குவதற்கு முன்னர் இந்த சம்பவங்களைக் குறித்து அறியாதவராக நீர் இருந்தீர்.