×
يوسفவசனம் 31

அல்-முக்தஸர்

فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ أَرْسَلَتْ إِلَيْهِنَّ وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَـًٔا وَءَاتَتْ كُلَّ وَٰحِدَةٍ مِّنْهُنَّ سِكِّينًا وَقَالَتِ ٱخْرُجْ عَلَيْهِنَّ ۖ فَلَمَّا رَأَيْنَهُۥٓ أَكْبَرْنَهُۥ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَـٰشَ لِلَّهِ مَا هَـٰذَا بَشَرًا إِنْ هَـٰذَآ إِلَّا مَلَكٌ كَرِيمٌ ﴿٣١﴾

அந்தப் பெண்கள் தன்னை மறைமுகமாக பழித்துப் பேசுவதை கேள்விப்பட்ட அரசனின் மனைவி அவர்களுக்கு அழைப்பு விடுத்து அனுப்பினாள். அவர்கள் யூஸுஃபைக் கண்டு விட்டு அவளை நியாயப்படுத்தலாம் என்பதற்கே அவ்வாறு செய்தாள். அவர்களுக்கு விரிப்பும் தலையணையும் உள்ள ஓர் இடத்தைத் தயார்படுத்தி அழைக்கப்பட்ட ஒவ்வொருத்திக்கும் உணவினை (பழங்களை) அறுப்பதற்கான கத்தியை வழங்கினாள். அவர்களை நோக்கி வரும்படி யூஸுஃபிடம் கூறினாள். அந்த பெண்கள் அவரைக் கண்ட போது அப்படியே பிரமித்துவிட்டார்கள். வியப்பில் உணவை (பழங்களை) அறுப்பதற்காக வழங்கப்பட்ட கத்தியைக் கொண்டு தங்களின் கைகளை அறுத்துக் கொண்டார்கள். “அல்லாஹ் தூய்மையானவன், இந்தப் பையன் மனிதரே அல்ல. இத்தனை அழகும் ஒரு மனிதனிடம் கொட்டிக் கிடக்காது. இவர் கண்ணியமான வானவரேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.