×
يوسفவசனம் 33

அல்-முக்தஸர்

قَالَ رَبِّ ٱلسِّجْنُ أَحَبُّ إِلَىَّ مِمَّا يَدْعُونَنِىٓ إِلَيْهِ ۖ وَإِلَّا تَصْرِفْ عَنِّى كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُن مِّنَ ٱلْجَـٰهِلِينَ ﴿٣٣﴾

யூஸுஃப் தம் இறைவனிடம் பிரார்த்தித்தவராகக் கூறினார்: “அவர்கள் என்னை அழைக்கும் தவறான நடத்தையில் ஈடுபடுவதை விட அவள் என்னை அச்சுறுத்தும் சிறையே எனக்குப் பிரியமானது. நீ அவர்களின் சூழ்ச்சியை என்னை விட்டும் அகற்றவில்லையெனில் நான் அவர்களின் பக்கம் சாய்ந்து விடுவேன். அவர்களின் பக்கம் சாய்ந்து அவர்கள் என்னிடம் எதிர்பார்ப்பதற்கு நான் உடன்பட்டால் அறிவற்றவர்களில் நானும் ஒருவனாகி விடுவேன்.