×
يوسفவசனம் 37

அல்-முக்தஸர்

قَالَ لَا يَأْتِيكُمَا طَعَامٌ تُرْزَقَانِهِۦٓ إِلَّا نَبَّأْتُكُمَا بِتَأْوِيلِهِۦ قَبْلَ أَن يَأْتِيَكُمَا ۚ ذَٰلِكُمَا مِمَّا عَلَّمَنِى رَبِّىٓ ۚ إِنِّى تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَّا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَهُم بِٱلْـَٔاخِرَةِ هُمْ كَـٰفِرُونَ ﴿٣٧﴾

யூஸுஃப் கூறினார்: “அரசரிடமிருந்தோ ஏனையோரிடமிருந்தோ உங்களுக்கு வழங்கப்படும் உணவு உங்களிடம் வருவதற்கு முன்னரே அதன் உண்மை நிலையையும் முறையையும் நான் உங்கள் இருவருக்கும் தெளிவுபடுத்தி விடுகிறேன். இந்த விளக்கம் எனக்கு என் இறைவன் கற்றுத் தந்தவையாகும். இது ஜோதிடமோ வானவியல் சாஸ்திரமோ அல்ல. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் மார்க்கத்தை நான் விட்டு விட்டேன். அவர்கள் மறுமையை ஏற்க மறுக்கிறார்கள்.