அல்-முக்தஸர்
وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِى ٱلْأَرْضِ يَتَبَوَّأُ مِنْهَا حَيْثُ يَشَآءُ ۚ نُصِيبُ بِرَحْمَتِنَا مَن نَّشَآءُ ۖ وَلَا نُضِيعُ أَجْرَ ٱلْمُحْسِنِينَ ﴿٥٦﴾
நாம் யூஸுஃபை குற்றமற்றவர் என நிரூபித்து அவரை சிறையிலிருந்து விடுவித்து அவர் மீது அருள்புரிந்ததைப் போன்று எகிப்தில் அவருக்கு இடமளித்தும் அவர் மீது அருள்புரிந்தோம். அவர் தாம் நாடிய இடத்தில் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம். இந்த உலகில் நாம் விரும்பும் அடியார்களுக்கு நம் அருளை வழங்குகின்றோம். நன்மை செய்வோரின் கூலியை நாம் ஒருபோதும் வீணாக்குவதில்லை. மாறாக அவர்களுக்குரிய கூலியை குறைவின்றி நிறைவாக நாம் அவர்களுக்கு வழங்கி விடுவோம்.