×
يوسفவசனம் 58

அல்-முக்தஸர்

وَجَآءَ إِخْوَةُ يُوسُفَ فَدَخَلُوا۟ عَلَيْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهُۥ مُنكِرُونَ ﴿٥٨﴾

யூஸுஃபின் சகோதரர்கள் தங்களின் பொருள்களுடன் எகிப்து நாட்டிற்கு வந்து அவரிடம் வந்தார்கள். அவர்கள் தமது சகோதரர்கள் என்பதை அவர் அறிந்துகொண்டார். ஆனால் அவர்கள் நீண்ட காலம் கடந்து விட்டதனாலும் அவருடைய உருவத்தில் ஏற்பட்ட மாற்றத்தினாலும் அவர் தமது சகோதரர் என்பதை அறிந்து கொள்ளவில்லை. ஏனெனில் அவரைக் கிணற்றில் அவர்கள் போட்ட போது அவர் சிறுவராக இருந்தார்.