அல்-முக்தஸர்
وَلَمَّا دَخَلُوا۟ مِنْ حَيْثُ أَمَرَهُمْ أَبُوهُم مَّا كَانَ يُغْنِى عَنْهُم مِّنَ ٱللَّهِ مِن شَىْءٍ إِلَّا حَاجَةً فِى نَفْسِ يَعْقُوبَ قَضَىٰهَا ۚ وَإِنَّهُۥ لَذُو عِلْمٍ لِّمَا عَلَّمْنَـٰهُ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ ﴿٦٨﴾
அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடன் அவர்களின் சகோதரரும் இருந்தார். அவர்களின் தந்தை கட்டளையிட்டவாறு அவர்கள் பல்வேறு வாயில்கள் வழியாக நுழைந்த போது அது அல்லாஹ் விதித்ததில் எதையும் அவர்களை விட்டும் தடுக்கவில்லை. அது யஃகூப் தம் பிள்ளைகளின் மீது காட்டிய பாசமும் அதனால் வழங்கிய அறிவுரையுமே அது. அல்லாஹ் விதித்ததே நிறைவேறும் என்பதை அவர் அறிந்தேயிருந்தார். விதியின் மீது நம்பிக்கை மற்றும் காரண காரியங்களைக் கடைப்பிடித்தல் தொடர்பாக நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தவற்றை அவர் அறிந்தவராவார். ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அதனை அறியமாட்டார்கள்.