அல்-முக்தஸர்
فَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمْ جَعَلَ ٱلسِّقَايَةَ فِى رَحْلِ أَخِيهِ ثُمَّ أَذَّنَ مُؤَذِّنٌ أَيَّتُهَا ٱلْعِيرُ إِنَّكُمْ لَسَـٰرِقُونَ ﴿٧٠﴾
யூஸுஃப் தம் பணியாளர்களுக்கு தம் சகோதரர்களுக்கான பொருள்களை ஒட்டகத்தில் ஏற்றிவைக்குமாறு கட்டளையிட்ட போது உணவுப் பொருட்களைப் பெற வருவோருக்கு உணவளிக்கும் அரசனின் அளவுக் குவளையை தம் பிரியமான சகோதரனின் பொதியில் அவர்களுக்குத் தெரியாமல் - அவரைத் தம்மிடம் தங்க வைத்துக்கொள்ளும் பொருட்டு - வைத்துவிட்டார். அவர்கள் தங்களின் குடும்பத்தினரின் பால் திரும்ப புறப்பட்ட போது அவர்களைப் பின்தொடர்ந்த ஒரு அறிவிப்பாளர் பின்வருமாறு அறிவிப்புச் செய்தார்: “உணவுப் பொருள்களை சுமந்து செல்லும் ஒட்டகக்காரர்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்கள்.”