×
يوسفவசனம் 83

அல்-முக்தஸர்

قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًا ۖ فَصَبْرٌ جَمِيلٌ ۖ عَسَى ٱللَّهُ أَن يَأْتِيَنِى بِهِمْ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ ﴿٨٣﴾

அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “அவர் திருடிவிட்டார் என்று நீங்கள் கூறுவது உண்மையல்ல. யூஸுஃபின் விஷயத்தில் சூழ்ச்சி செய்ததைப் போலவே இவரின் விஷயத்திலும் சூழ்ச்சி செய்வதை உங்களின் மனம் உங்களுக்கு அழகாக்கிக் காட்டி விட்டது. நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேன். அல்லாஹ்விடமே என் கவலைகளை முறையிடுவேன். யூஸுஃப், அவருடைய சகோதரன் மற்றும் மூத்த சகோதரன் என அவர்கள் அனைவரையும் அவன் என்னிடம் கொண்டுவரக்கூடும். அவன் என் நிலையை நன்கறிந்தவன். எனது விடயத்தில் அவன் செய்யும் ஏற்பாட்டில் ஞானம் மிக்கவன்.