அல்-முக்தஸர்
يَـٰبَنِىَّ ٱذْهَبُوا۟ فَتَحَسَّسُوا۟ مِن يُوسُفَ وَأَخِيهِ وَلَا تَا۟يْـَٔسُوا۟ مِن رَّوْحِ ٱللَّهِ ۖ إِنَّهُۥ لَا يَا۟يْـَٔسُ مِن رَّوْحِ ٱللَّهِ إِلَّا ٱلْقَوْمُ ٱلْكَـٰفِرُونَ ﴿٨٧﴾
அவர்களின் தந்தை அவர்களிடம் கூறினார்: “என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் பற்றிய செய்தியை அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ் தன் அடியார்களின் துன்பத்தைப் போக்குவான் என்பதில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நிராகரித்த மக்கள் மட்டுமே அல்லாஹ் துன்பங்களைப் போக்கி விடுதலையளிப்பான் என்பதில் நம்பிக்கை இழப்பார்கள். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் மாபெரும் வல்லமையை, அவன் தன் அடியார்களுக்கு வழங்கும் மறைவான அருட்கொடைகளை அறிய மாட்டார்கள்.