×
يوسفவசனம் 91

அல்-முக்தஸர்

قَالُوا۟ تَٱللَّهِ لَقَدْ ءَاثَرَكَ ٱللَّهُ عَلَيْنَا وَإِن كُنَّا لَخَـٰطِـِٔينَ ﴿٩١﴾

அவருடைய சகோதரர்கள் தாங்கள் அவருடன் நடந்துகொண்ட முறைக்கு வருத்தம் தெரிவித்தவர்களாகக் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் எங்களை விட உமக்குப் பரிபூரணமான பண்புகளை வழங்கி உம்மை சிறப்பித்துள்ளான். நாங்கள் உம்முடன் நடந்து கொண்ட விதத்தில் தவறிழைத்த அநியாயக்காரர்களாக இருந்தோம்.”