அல்-முக்தஸர்
قَالُوا۟ يَـٰٓأَبَانَا ٱسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَآ إِنَّا كُنَّا خَـٰطِـِٔينَ ﴿٩٧﴾
அவருடைய மகன்கள் அவரிடம் யூஸுஃபின் விஷயத்திலும் அவருடைய சகோதரரின் விஷயத்திலும் தாங்கள் நடந்துகொண்ட முறைக்கு வருத்தம் தெரிவித்தவர்களாகக் கூறினார்கள்: “எங்களின் தந்தையே! எங்களின் முந்தைய பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக நாங்கள் யூஸுஃப் மற்றும் அவருடைய உடன் பிறந்த சகோதரரின் விஷயத்தில் தவறிழைத்த குற்றவாளிகளாக இருந்தோம்.”