அல்-முக்தஸர்
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ الٓمٓر ۚ تِلْكَ ءَايَـٰتُ ٱلْكِتَـٰبِ ۗ وَٱلَّذِىٓ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ٱلْحَقُّ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يُؤْمِنُونَ ﴿١﴾
(الٓمٓر) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. -தூதரே!- இந்த அத்தியாயத்தின் உயர்ந்த வசனங்களும் அல்லாஹ் உம்மீது இறக்கிய குர்ஆனும் சந்தேகமற்ற உண்மையாகும். அது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்பதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர் கர்வத்தினாலும், பிடிவாதத்தினாலும் இதனை நம்பிக்கை கொள்ளவில்லை.