×
الرعدவசனம் 18

அல்-முக்தஸர்

لِلَّذِينَ ٱسْتَجَابُوا۟ لِرَبِّهِمُ ٱلْحُسْنَىٰ ۚ وَٱلَّذِينَ لَمْ يَسْتَجِيبُوا۟ لَهُۥ لَوْ أَنَّ لَهُم مَّا فِى ٱلْأَرْضِ جَمِيعًا وَمِثْلَهُۥ مَعَهُۥ لَٱفْتَدَوْا۟ بِهِۦٓ ۚ أُو۟لَـٰٓئِكَ لَهُمْ سُوٓءُ ٱلْحِسَابِ وَمَأْوَىٰهُمْ جَهَنَّمُ ۖ وَبِئْسَ ٱلْمِهَادُ ﴿١٨﴾

தன்னை ஏகத்துவப்படுத்துமாறும் தனக்குக் கட்டுப்படுமாறும் தமது இறைவன் அழைத்ததை ஏற்றுக்கொண்ட நம்பிக்கையாளர்களுக்கு சுவனம் என்னும் அழகிய கூலி இருக்கின்றது. அவனை ஓருமைப்படுத்தி அவனுக்குக் கட்டுப்படுமாறு விடுத்த அவனது அழைப்புக்குப் பதிலளிக்காத நிராகரிப்பாளர்களுக்கு பூமி நிறைய செல்வங்கள் இருந்து அதேபோன்று மேலதிகமாகவும் இருந்தாலும் அவர்கள் வேதனையிலிருந்து தப்பிக்க அவை அனைத்தையும் ஈடாகக் கொடுத்து விடுவார்கள். அவனுடைய அழைப்புக்கு பதிலளிக்காதவர்கள் அவர்களின் தீய செயல்களுக்கு முழுமையாக விசாரணை செய்யப்படுவார்கள். அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அவர்களின் விரிப்பும் தங்குமிடமுமான நரகம் மிகவும் மோசமானது.