அல்-முக்தஸர்
وَٱلَّذِينَ صَبَرُوا۟ ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُوا۟ مِمَّا رَزَقْنَـٰهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِٱلْحَسَنَةِ ٱلسَّيِّئَةَ أُو۟لَـٰٓئِكَ لَهُمْ عُقْبَى ٱلدَّارِ ﴿٢٢﴾
அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும் அவன் அவர்களுக்கு விதித்த மகிழ்ச்சியான, துன்பமான விஷயங்களிலும் அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பதிலும் அவனுடைய திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்கிறார்கள்; தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுகிறார்கள்; நாம் அவர்களுக்கு வழங்கிய செல்வங்களிலிருந்து கடமையான உரிமைகளை நிறைவேற்றுவார்கள். முகஸ்துதியைத் தவிர்க்க மறைமுகமாகவும் மற்றவர்களுக்கு முன்மாதிரிக்காக வெளிப்படையாகவும் அவற்றிலிருந்து உபரியாகவும் செலவு செய்கிறார்கள்; தங்களுக்கு தீங்கிழைத்தவர்களுக்கு நன்மை செய்து அவர்களின் தீங்கை நன்மையால் எதிர்கொள்கிறார்கள். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் மறுமை நாளில் சிறந்த முடிவைப் பெறுவார்கள்.